அன்னையர் தினா வாழ்த்துக்கள்

இன்று அன்னையர் தினம்
வருடத்தில் ஒரு நாள் நாம் அனைவரும் வாழ்த்தி கொள்ளும் பழக்கம்
எங்கிருந்து வந்தது ???
தினமும் நாம் நம் அன்னையரை வாழ்த்தி அவரிடம் ஆசி பெற்று
வாழும் நம் வாழ்க்கையில்
எங்கிருந்து வந்தது இந்த ஒரு நாள் வாழ்த்து???
அப்படி என்றால் மீதி நாட்களில் ???
நாம் நம்மை இந்த மேலை நாட்டு கலாச்சாரத்தில்
தொலைத்து கொண்டு இருக்கிறோம் .
ஆம் ...அங்கு பிள்ளைகளும் பெற்றோர்களும் சேர்ந்து வாழ்வதில்லை
அதனால் இது போன்ற வாழ்த்துக்கள்
கொண்டாட்டங்கள் ...
அடுத்த அன்னையர் தினம் வரை அவர்களுக்கு
இது ஒரு நினைவு பரிசு ....
வேண்டாம் நமக்கு இந்த கலாச்சாரம்
தினமும் நாம் நம் அன்னையரை போற்றி
வணங்கி அவர்களை ஒரு குழந்தையை போல்
பேணி பாதுகாப்போம் ...
நேரில் நாம் காணும் தெய்வத்தை
வணங்கி அவளை நாம்
தோள் கொடுத்து நடத்துவோம்
சிறு வயதில் நாம் நடக்க நம் பிஞ்சு கைகளை பிடித்து
நடக்க பழக்கியவளை
இன்று நாம் முதியோர் இல்லத்தில்
சேர்த்து அவளை நாம் கண்ணீர் சிந்த வைக்கிறோம்
காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்
தாய்மை என்றும் நம்மை தூற்றியதில்லை
என்றும் நம்மை வாழ்த்தியபடியே இருக்கும்
அவள்தான் தாய்
அவளை நாம் நம் உயிரினும் மேலாக போற்றுவோம்

எழுதியவர் : உமா பாபுஜி (13-May-18, 12:22 pm)
சேர்த்தது : umababuji
பார்வை : 202

மேலே