பக்க துணை
![](https://eluthu.com/images/loading.gif)
திகட்டாத இரவு
பறக்கும் நிலவு
துடிக்கும் நட்சத்திரங்கள்
விரியும் மேகங்கள்
வழி தவறிய தென்றல்
எதுகை மோனை அறியா
பறவையின் பாடல்
கண்ணடிக்கும் தெரு விளக்கு
காலம் கடத்தும் தொலைக்காட்சி
தனிமை ஒன்றும் கொடுமை இல்லை
பக்கத்துணையாய்
இவையெல்லாம் இருக்கும்போது