அன்னையர் தினம்
![](https://eluthu.com/images/loading.gif)
------------------------------
ருவறையில் காத்திடும்
கருணையின் வடிவங்கள் !
அன்போடு ஆளாக்கும்
பண்பின் உருவங்கள் !
பாசத்தைப் பொழிந்திடும்
இணையிலா இதயங்கள் !
மண்ணில் நமக்கெல்லாம்
மாசில்லா நெஞ்சமுள்ள
மகத்தான உறவென்றால்
மறுப்பேது அன்னைதானே !
எனதன்னை மறைந்தாலும்
எத்தாயும் எனக்கு அன்னையே !
கரம்கூப்பி வேண்டுகிறேன்
உள்ளவரை உலகினில்
கைவிடாதீர் உள்ளங்களே
காலமும் அன்னையை !
வணங்குகிறேன் வையத்தில்
வாழ்கின்ற அன்னையர்களை !
" அன்னையர் தின வாழ்த்துக்கள் "
பழனி குமார்