செல்லாக்காசுதான்
பிறருக்காக வாழ்வதின்
மறைபொருள்
நாம் வாழ்கின்ற வாழ்வில்
பிரதிபலிக்கின்றது ,
சோடைபோகாத சொர்க்கலோக
வாழ்கை தான் அது ,
ஏழையாக இருந்தாலும்
மாபெரும் உழைப்பாளியாக இருந்தாலும்
அடுத்து இருப்பவனுக்கு
எப்படி என்ன தேவை என்று
உணர்ந்து உதவும் குணமே
அவனை உயர்த்துகிறது,
இல்லை என்றால்
அவன் இருந்தும் இல்லையே
நல்ல மனமும் குணமுமே
ஒருவனை உயர்த்துகிறது
பணம் இருந்தால் உயர்வு என்று
நினைப்பது முட்டாள்தனம்
எத்தனை கோடி பணமும்
அடுத்தவர் முன் அது செல்லாக்காசுதான் ,
பிறரின் தேவையறிந்து
உதவும் மனமும் குணமும் உள்ளவனுக்கு
இவ்வுலகம் முழுவதும் சொத்துதான்

