கவிதை எழுத தெரியாது ...
நொடிகள் ஓடுகின்றன
நான் மட்டும் அசையவில்லை..
உன்னை நினைத்துகொண்டு
கண்களை மூடி கொண்டு
எழுத அமர்ந்திருந்தேன்...!
எழுதுகோல் முனை காய்கிறது..
கனவும் தேய்கின்றது..!
ஒன்றும் புலப்படவில்லை...!
மனதி தோன்றிய உன்னை
காகிதத்தில் உலவ விட
என்னால் முடியவில்லை..!
கவிதையல் கட்டி இழுக்க - என்
கற்பனை கயிறும் பத்தவில்லை...!
யாரேனும் என் செவியில்
உரையுங்கள்
உனக்கு " கவிதை எழுத தெரியாது" என்று...
--கவிதா--