படியின் பணி



படிகள்
தன் மீது
எத்தனை பேர்
ஏறுகிறார்கள் அல்லது
இறங்குகிறார்கள் என்பதை
எண்ணிக் கொண்டிருப்பதில்லை

எத்தனை பேர்
ஏறினாலும் இறங்கினாலும்
அசையாது உறுதியாக
இருக்க வேண்டும் என்பதையே
எண்ணிக் கொண்டிருக்கிறது
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-11, 9:49 pm)
பார்வை : 1984

மேலே