மழை கவிதை
சின்ன சின்ன துளிகள் சேர்த்து
செல்லமாய் செய்த மழை!.....
நீ மண்ணில் வந்தால்
மஞ்சம் மகிழும்...
நெஞ்சம் குளிரும்..
கொஞ்சும் தமிழ்
கெஞ்சும் என்னை கவிதை
என உன்னை வடிக்க..!
கவிதைக்காக காத்திருக்கும்
காலமெல்லாம் கன
நேரத்தில் தளிர்த்து நின்றாய்...
என் காகிதத்தில் முளைத்து நின்றாய்..
கவிஞன் ஆகி போகிறேன்
உன்னை பார்த்த மாத்திரத்தில்....