எழுத்து சித்தரே

என் புத்தக அலமாரியில்
இன்றும் உம் மலர்ந்த முகம் கண்டுகொண்டே தான்
இருக்கிறேன் ஐயா....
இறந்தும் இறவாத வரம்
வாய்த்தவரே...
உம் எழுத்துக்களில்
என்றும்
நீர் நீடுழி வாழ்வீர்...
உம் படைப்புகள் ஒவ்வொன்றும்
பொக்கிஷம்...
உம் புதிய படைப்புக்களை
இனி என்று காண்போம்
ஐயா????
வயதில் பாலகனாய்
எழுத்தில் என்றும் இளமையான குமாரனாய்...
எங்கள் இல்லங்களில் என்றுமே
வாழும் பாலகுமாரரே...
உம் புகழ்
இவ்வையம் உள்ளவரை நிலைத்திருக்கும்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (17-May-18, 3:11 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 1464

மேலே