பிறந்த நாள் வாழ்த்து

நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து
---------------------------------------------------------

உன்னை நண்பனாய் பெற்றமை
நான் செய்த பாக்கியம் நண்பா
பிறப்பின் பயனை உன் நட்பினால்
தெளிவுபடுத்திய புத்தன் எனக்கு நீ
உந்தன் பிறந்த நாள் இன்று
உனக்கு வாழ்த்துக் கூற எனக்கேது அருகதை
இருப்பினும் இந்த எளியோன் உன்னை
மனதார வாழ்த்துகிறேன் பல்லாண்டு நீ வாழ
நட்பின் இமயமாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-May-18, 5:57 am)
பார்வை : 32026

மேலே