தேடல்

தேடல்! உன்னுள் தேடல்,
உயிரோற்ற தேடல்,
எதை தேடுகிறாய் ?எதை துளைத்தாய்?
இல்லை!இல்லாததையும் தேடலாமே
அறிவுத் தேடல் கற்றுத் தரும்,
பணத் தேடல் உழைப்பை தரும்,
அன்புத் தேடல் இன்பம் தரும்,
நிறைவுத் தேடல் தெளிவை தரும்,
தேடலே தோன்றவைக்கும்,
தேடலே பலப்படுத்தும்,
தேடலே ஊக்குவிக்கும்,
தேடலே ஒப்பற்ற மனிதனாக்கும்.

எழுதியவர் : Kavitha S (19-May-18, 7:53 pm)
சேர்த்தது : Kavitha S
Tanglish : thedal
பார்வை : 2814

மேலே