கவிதை
நான் எழுதும் கவிதை
உனக்காக என்றால் மிகையாகாது
நானே உனக்காகத்தான் என்றால்...!!!!
என் இதழ் இதழோடு சேர துடிப்பது
என்னிடத்தில் இல்லை
உன்னிடத்தில்....!!!
என் கண் இமைக்கும் நேரம்
நான் உன்னை பார்க்க அல்ல
நீ என்னை பார்க்கிறாயா என்பதை நான் பார்க்க....!!!
வந்துவிடு என்று அழைப்பது எனக்காக அல்ல
என்னிடத்தில் இருக்கும் உன் இதயத்துடிப்பினை
நீ அறிவதற்காக....!!!!