இயற்கையும் உதவுதடி உன்னை வர்ணிக்க
நான்விடும் மூச்சுக்காற்று கூட முந்துகிறது
உன்னை தொட்டுவிடவே ஆசைப்படுகிறது
தென்றல் கூட தெம்மாங்கு பாடுது
இசையில்லாமல்,காற்றின் அசைவினால் கவிபாடுது
நீர்,நிலைகள் கூட மோட்சம் பெறுகிறது.
உன் விரல்கள் பட்டதால் உச்சம் தான் அடைகிறது
ஆகாயம் கூட தரையிறங்க ஆசைப்படும்.
அவளின் பாதச்சுவடு படுவதற்காக தவம்தான் கிடக்கும்
இயற்கையும் என்னோடு இனையுதடி
என்னவளே உன்னை வர்ணிக்க ஏதோ ஒரு வகையில் உதவுதடி
mk

