வெட்கம்

தவிர்க்க முடியாத சில
சந்தர்பங்களில்
முதன் முதலாக
உள்ளாடைக் கடைகளில்
ஒரு பெண் தன்
அளவைச்சொல்லி ஒரு
ஆணிடம் உள்ளாடை
கேட்கும் நேரத்திலே...

முதன் முதலில்
பூப்பெய்திய காரணத்தால்
விடுமுறை எடுத்து
வீட்டில் முடங்கியது
தன் சக ஆண் நண்பர்களுக்கு
தெரியவரும்போது...

முதன் முதலில்
நிறைந்த சபையில்
தன்னை பெண்பார்க்க
கூடியிருக்கும் கூட்டத்திற்கு
அச்சத்தோடு காபி கொடுக்கும்
தருணங்களிலே...

நீண்ட பெண்பார்க்கும்
படலத்தின் வரிசையில்
முதன் முதலில்
பார்த்தவுடனே எனக்கு
பெண்ணை பிடிச்சிருக்கு
என சொல்லும்
ஆணின் முகத்தை
மீண்டும் ஒருமுறை பார்க்கும்போது

வெட்கம் அந்த பெண்ணின் முகத்தை ஒரு நொடி
சிவக்க வைத்துதான் செல்கிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (29-May-18, 4:39 am)
Tanglish : vetkkam
பார்வை : 3547

மேலே