மலர்களே ஒரு சொல் கேளீரோ
மலர்களே ஒரு சொல் கேளீரோ
உங்க ளிதழ்களை விரித்து க்காய்ந்த சருகாகிட காற்றில் விட்டு விடாதீர்
அன்னிய ரெவரராயி னுமவரை
யுந்தனருகி னிலண்ட விட்டு
தொடவிட்டு கசங்கி விடாதே
உன க்குள்ளூரு ந்தேன்மதுரமோ நீ படைத்ததன்று இறைவனா லீந்த மிக
பெரும் வரப்பிரசாதமத பரிச ளிப்பா குமதனை மதித்து நடப்பாயாக
ஒவ்வொரு தேன் துளியிலும்
எழுதப்பட்டிருக்கிறது அதனை
சுவைக்கப் போகிறவரின் பெயர்
என்பதனதை மறந்துவிட கூடாது
அதுவுன் கடமையாகும் மறவாதே
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பிவை
நாபொருளின் நிழலில் நீயிருத்தல வசிய மாகிறது கடைபிடித்திடுவாய்
அதையுன் மனம் போன போக்கில்
கேட்போருக்கும் பறிப்போருக்கும் விட்டு கொடுக்கு மதிகாரம் உன் கையிலில்லை கவணத்தில் கொள்
பொங்கி போராடு முடியாது போயின் முங்கி உயிரை விடு காவியமாகிடும்
தென் றலுன்னை ச்சீண்ட வாச மண்டல மெழுகிறததை நாசமண்டலமாகிடாது காத்து நிற்பாயாக புத்தம் புது மலர்களே
நீ வாழ்க்கை ப்படகாவாய் துடுப்புன்னை
வழிநடத்தி ச்செல்ல வரும்; எடுப்பாயிரு
கடுப்பாக்கி படகு கவிழ உன்னை நீயே மூழ்கடித்துக் கொண்டு விடாதேயும்
"தன் தேகமொரு பிள்ளையினை பெருமுன்னே சந் தேகமெனு மொருப் பிள்ளையினை பெற்று நீயும் தாலாட்டு
பாடுதற்கு மாறாய் முகாரி பாடிடாதே"
காலத்திற்கும் கண்களில் கண்ணீர் புறண்டோட லாயிரங் கால்வாயினை
அரித்தெடுத்து வங்கக்கடலையடையாது உன் மனக்கடலில் பாய்ந்து நாறலாகும்
காதலால் காதலை கட்டியணைத்
தென்றன் காதலியென எழுதட்டுமே
அக்காதலியென் காதலியே யன்
றென் கவிதையென பாடட்டுமே
அக்கவிதையே என் காதலி என்றும் துருவை க்கருவா யுருவாக்குமப் பெருமையி லிவ் வகிலமதை அர சாளட்டுமே யானந்த வெள்ளமதில் நீந்தட்டுமே யதுவரை ப்பொருத்
திருந்து வழிவகுக்க மாட்டீரோ என தருமை காதல ரும்பும் மலர்களே
°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி
கண்டம்பாக்கத்தான்
மும்பை மகாராஷ்டிரா