நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று
""ஹலோ....எஸ்.ஐ. ங்ள...சார்...ஒரு முக்கியமான விஷயம் பேசனும், அதை அங்கே நாலு பேர் முன்னால் பேசினா
அவ்வளவா நல்லா இருக்காது, காரணம்
ஒரு பொண்ணு அதாவது என் தங்கை வாழ்க்கை பாதித்து விட கூடாதுஎன்று உங்கள தனியாக கூப்பிட்டு..... பேசிலாமேன்னுதான் ""
""நீங்க...எங்கே...இருக்கீங்க""
""மாரியம்மன் கோவில் தெருவுல பொட்டிக்கடைக்கு பின்னாடி நிற்கிறேன் சார்...""
""சரி...சரி...அங்கேயே நில்லுங்க அஞ்சி நிமிஷத்திலே வந்துடுறேன் ஆமாம் என்ன கலர் துணி உடுத்திக்கொண்டு இருக்கீங்க """
""வெள்ளை வேட்டி வெள்ளை சட்டைங்க """
""வேறு ஏதாவது அடையாளம் சொல்லுங்க ; ஏன்னா தமிழ் நாட்டில் எங்கே பார்த்தாலும் வெள்ளையும் சள்ளையுமாத்தான் எல்லாம் உடுத்தி இருக்காங்க ; அதனால் கேட்டுத்தெரிந்து கொள்கிறேன்""
""ஒன்னு பண்ணுங்கள் ஒரு பொடிப்பயலை அனுப்பி வைக்கிறேன் ஸ்டேஷனுக்கு; பேரு பாபு உங்க இடத்துக்கு வருவான்; பேரக்கேளுங்க சொல்லுவான் உங்க வண்டியில் குந்தவச்சிக்கிட்டு வாங்க நான் இருக்கும் இடத்தில் வந்து விடுவான் ""
""சரிசரி ""
இடத்தில் வந்தாச்சி ""டேய் பையா ""
""மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன் நான் கடைந்தெடுத்த பச்சை தமிழன்
பையா பையா என்று வடமாநிலத்தவங்க பெயரை சொல்லி கூப்பிடாதீங்க அப்புறம் நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு போயிடுவேன் ""
இப்போ நான் அப்படி தப்பாக என்ன சொல்லிட்டேன் இப்படி பச்சை மிளகாய் கடிச்சவன் மாதிரி குதிக்கிறான் சரிசரி போய் ஐயாவுக்கு குடிக்க ஏதாவது வாங்கியா இந்தா பணம்""
""என்ன சாராயமா இல்லை சர்பத்தா ""
""இளணீ""
""ஒன்னா ரெண்டா ""
""மூனு""
""நான் அங்கேயே குடிச்சிக்கிறேன்
ரெண்டு வாங்கியாறேன் சிறுவன் சென்றதும்
"" ஐயா..ஒருத்தன் என் தங்கை கல்லூரிக்கு போகும் போதும் வரும் போதும் இடைஞ்சல் பண்ணிக்கொண்டு இருக்கிறான்;
அவனை சரிகட்ட என்னால் முடியும்; ஆனா இது விஷயம் நாலு கண்ணில் பட்டா அவளோட எதிர்காலத்தை பாதிச்சிடுமோன்னு ஒரு அச்சம்; அவன் கல்லூரி யை சேர்ந்த மாணவன் இல்லை அப்படி இருந்திருந்தால் பயப்பட ஒன்னும் இல்லை ஒன்னா படிக்கிறவங்கன்னு யாரும் அதை தப்பாக எடுதுக்க மாட்டாங்க அதனால்தான் உங்க உதவியோடு....""
உங்களுக்கு உங்கள் தங்கை சொல்லி
தெரிந்து கொண்டீர்களா இல்லை அவளுக்கும் தெரியாமல் நீங்கள்
நோட்டமிட்டு தடைசெய்து உள்ளீறா
தங்கை மூலமாக தெரியாது தங்கையாக கல்லூரி வாட்ச்மேன் எனக்கு தெரிஞ்சவர் அவரிடம் நான் ஏற்கனவே தங்கையை கவணிச்சிக்க சொல்லி வவைத்திருந்தேன் அவர் மூலமாக தெரியவந்தது அதனால்தான்
உன் தங்கை உங்க கிட்ட சொல்ல வில்லைன்னா அர்த்தம் ஒருவேளை உன் தங்கை அவனை விரும்பலாம் அதனால் அவளால் சொல்ல முடியாது இருந்திருக்கும் இல்லையா நீங்க இடையில் புகுந்து எதையாவது பண்ண அது அவளுக்கு தெரியவரும் இரண்டு பேரும் இரண்டாம் பேருக்கு தெரியாமல்
குறுக்கு வழியில் போக வழி வகுக்கும்
எதுக்கும் எதையும் யோசிச்சி செயல்படுங்கள் பையனப்பத்தி யாரு எவருன்னு விசாரிச்சி சொல்லுங்க சரி
நீங்க என்ன பண்ணனும்ன்னு நெனைக்கிறீங்க அவனை...""
""பெரிய இடத்து பையனோ இல்லை ஏழை குடியை சேர்ந்தவனோ உசுரு உசுருதானே தங்கைக்கு தொல்லையா
இல்லாமல் தடுக்கனும் அவ்வளவுதான்""
""சரி...ஒரு பிராது எழுதுங்கள் உங்களால் வரமுடியாதுன்னா அந்த பொடியன் கையிலே கொடுத்து அனுப்புங்க நான் வேறு யாராலும் நோட்டமிடாதபடிக்கு பாத்துக்கிறேன்""
""சரி...இதை...வைங்யிங்க..இப்போதைக்கு இளணீ குடித்துவிட்டு போகலாமா"" குடித்துவிட்டு சென்று விட்டார்கள்
மறுநாள் எஸ்.ஐ. மப்டியில் காலேஜ் போனார் பையனின் சேட்டைககளை கவணித்தார் வந்துவிட்டார்
மறுநாள் பையனை கல்லூரி பக்கம் காணவில்லை காரணம் தெரியாமல் யோசித்து நின்றனர் சரி மறுநாள் வந்து நின்றார் பையனை காணவில்லை முதல் நாள் அவனோடு பார்த்த அந்த நபரை கண்டு விசாரிக்க
""தம்பி நேற்று உன் கூடவே இருந்தாரே ஒரு தம்பி அவரை கொஞ்சம் பார்கனும் ""
""ஏன் என்ன விஷயம் ஏன் அவனை நீங்க பார்க்கனும் ""
""இல்லை வேலைக்கு சொல்லி வைத்து இருந்தார் அதை பத்தி எங்க அலுவலகத்தில் தெரிஞ்சிக்கிட்டு வரசொன்னாங்க சரி விடுப்பா பையனை பாக்க கெடைக்கலன்னு சொல்லிடுறேன் ""
""ஏங்க...அவனுக்கு வேலையே கெடைச்சாலும் இப்போதைக்கு செய்யிற நெலமையில அவன் இல்லீங்க""
""ஏன் ""
""அவன் ஆஸ்பத்திரியில் கெடக்கிறானுங்க""
""என்ன ஓடம்பு சரியில்லையா ""
""நேத்தைக்கு இரண்டு மூனுபேர் வந்தார்களாம் இரண்டு பேர் அவனை அமுக்கி புடிச்சாங்களாம் ஒருத்தன் அறிவாளை உருவி அவனோட குதிகால் நரம்பை இரண்டு காலிலும் வெட்டிப்புட்டு ஓடிப்போயிட்டானுங்களாம் ""
""அப்போது நீங்கெல்லாம்
அவன் கூட இல்லையா ஆளுங்களை
பார்க்க வில்லையா பார்த்தவங்க யார் யாருக்கு தெரியும் ""
""அன்றைக்கு நாங்கள் கொஞ்சம் நேரங்கழிச்சி வந்தோம் பார்த்தா ஒரே கூட்டமாக இருந்தது கூட்டத்தில் பார்த்தா இவன் சுயநினைவு இல்லாமல்தான் கிடந்தான் உடனே தூக்கிட்டு போயி ஆஸ்பத்திரியில் சேர்த்தோம் ""
""அவரை பார்க்க முடியுமா ""
""வாங்க ""
""பையனை பார்த்து விட்டு..... யாரு எவருன்னு ஒன்னும் துப்பு கிடைக்கவில்லயா?""
""அவன் இன்னும் சுயநினைவுக்கு வந்த பிறகுதான் தெரிந்தால் தெரியலாம் ""
""அவரு கைப்பேசி உபயோகிக்கிறவரா இருந்தா யாராவது மெறட்டி இருந்தா துப்பு கெடைக்கலாம் இல்லையா ""
இதோ அவனோட தலையைணைக்கு அடியிலிருந்து எடுத்து காட்டினான்
""இதில் பேலன்சே இல்லை ரிசீவுடு கால பாரு இதிலே ஒருவாரம் முன்னால் வந்தது மட்டும் தான் இருக்கு சரிப்பா வச்சிடு வேற ஒரு க்ளுவும் கெடைக்கலையே சரி நான் வரேம்பா
சுயநினைவு திரும்பினா நான் வந்த விஷயத்தை சொல்லுங்க அப்போ நான்வர்றேன்.""
தனக்கு தானே சிந்திக்க எஸ்.ஐ.
ஒருவேளை பொண்ணுக்கு அண்ணன்
செஞ்ச வேலையாக இருக்குமோ
ச்சா....ச்சா....இருக்காது அதுக்கு போலீசார் உதவி எதுக்கு கேட்டாரு வேறு யாராக இருக்க முடியும் மறுபடியும் போய் சுயநினைவு வந்து இருந்தா அவனையே கேட்போமே
மறுநாள் எஸ்.ஐ. போனார் எக்கச்சக்கமான இரத்தம் போயி இருக்கும் போல பையனுக்கு கையை கூட தூக்க முடியாமல் அவஸ்தை பட்டான் ""வேலை சம்பந்தமாக சொன்னவர் இவர் தான்"" என்று அவனது சிநேகிதர் காது கிட்ட போய் சொன்னான்
""டேய் அவரு நம்ம ஏரியா எஸ்.ஐ. டான்னான் நண்பன் திடுக்கிடும் படி ஆனான் ""
எஸ்.ஐ.யை தன் அருகில் அழைத்து கைப்பேசியில் இருந்த போட்டோவை காட்டினான்
போட்டோவை பார்த்து எஸ்.ஐ. அதிர்ந்து போனார் அதில் பெண்ணின் அண்ணனோடு இருந்த சிறுவன் உருவம் அவன் அருகில் மூன்று பேர் நின்றிருந்தது தெரிந்தது சிறுவன் தன் ஆள் காட்டி விரலை நீட்டி படி தெரிந்தது
நாம சந்தேகப்பட்டது நிஜமாகிவிட்டது
இந்த படத்தை எடுக்கனுமுன்னு எப்படி தோணுச்சி
சார் நான் படம் எடுக்கனுமுன்னு நெனைச்சி எடுத்தது ஒருத்தனோட சிவப்பு மோட்டார் சைக்கிளில் மேல் உட்கார்ந்து பின்னால் தெரியும் சூரிய அஸ்தமத்தை தான்; அதில் இவர்கள் உருவம் பதிவு ஆகி இருந்தது அதனால் என்னை வெட்டியது இவர்களாக இருக்குமோ என்று சின்ன சந்தேகம் அதனால்தான் இதை உங்களிடம் காட்டினேன்
நீ சந்தேகப்பட்டது சரிதான் அப்படின்னு எனக்கும் தோணுது அந்த படத்தை தன் கைபேசியில் இறக்கி எடுத்துக்கொண்டு பையனிடம்
""ஆளை கண்டுபிச்சிட்டு பிறகு வந்து உன்னை சந்திக்கிறேன் ""என்று சொல்லி விட்டு வந்து விட்டார் எஸ்.ஐ.
பெண்ணின் அண்ணனோடு இருந்த சிறுவனை அழைத்து வரச்சொல்லி
""தம்பி இதோ இந்த போட்டோவில் இருப்பது யார் என்று சொல்லு ""
""இது நான் தான் எங்க எஜமானோட தங்கைக்கு எவனோ லட்டர் கொடுத்து விட்டானாம் கல்லூரி வாட்ச்மேன் மூலமாக தரியவந்து ராத்திரி வீட்டில் ஒரே ரகளை விடிஞ்சி என்னை அழைத்து இப்போது இந்த ஆளை நல்லா பாத்துக்கோன்னார் அவன் ஒரு சிவப்பு மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து இருந்தான் பார்த்துக்கொண்டு விட்டேன்
மறுநாள் யாரோ மூனு பேரோட என்னை அன்றைக்கு பாத்துக்கச்சொன்ன ஆளை
இவங்க ளுக்கு காட்டிவிட்டு நீ வந்துடுன்னார் அவர் எப்படி சொன்னாரோ அப்படியே அவன் அதே சிவப்பு மோட்டார் சைக்கிளில் மேல் உட்கார்ந்து இருந்தான் தூரத்தில் நின்று என் கூட அனுப்பின மூனு பேருக்கும் சிவப்பு மோட்டார் சைக்கிள் மேல் உட்கார்ந்து இருக்கும் அவன் தான் என்று காட்டிவிட்டு நான் வந்துட்டேன்""
""அப்படியா சரி நீ போ.... ம்...ஒரு நிமிஷம் தம்பி இங்கே வா இந்தா இந்த ரசீதை உங்க எஜமான் கிட்டே கொடுத்து விடு இது எனக்கு லஞ்சம் கொடுத்த பணம் அதை ஒரு முதியோர் இல்லத்தில் அவர் பேரால் நன்கொடையா அவரே கொடுத்து உள்ளதாக அவர் பேர்லேயே ரசீது அவர் எனக்கு கொடுத்த அன்னைய தேதியிலேயே பணத்துக்கு ரசீது அவரிடம் கொடுத்துவிடு""
""பொழைக்கத் தெரியாதவர் போல இருக்கு"" (மனதுள் நினைத்துக் கொண்டு)
நேராக ஸ்டேஷன் வந்தார் டி.ஜி.பி.யிடம் கலந்தாலோசித்து விட்டு பெண்ணின் அண்ணனின் கையில் விளங்கு மாட்டினார் எஸ்.ஐ.
நான் செய்த தவறை சொல்லி விட்டு பிறகு கையில் கூப்பிடுங்கள் என்றார் பெண்ணின் அண்ணன்
உன் தங்கைக்கு லவ் லட்டர் கொடுத்தவனை விட்டு விட்டு ஒரு நிரபராதி யை கொலை பண்ண ஆளை
அனுப்பி வெட்டுப்பட்டு இருக்கிறீர்களே
அதனால் தான் என்றார் எஸ்.ஐ.
என்னது....
உங்களுக்கு ஏதாவது சொல்ல நினைத்தால் அதை காவல் நிலையத்தில் வந்து சொல்லுங்க இப்போது கொவாப்ரேட் பண்ணங்க
உடனே வண்டி யில் ஏற்றாமல் தெரு முடியும் வரை நடத்தியே கொண்டு வந்து
கடைசியில் வண்டியில் ஏற்றி சென்றனர் அப்போதே அண்ணன் பாதி செத்து விட்டான்
தங்கையின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டிருந்த அண்ணன் தங்கையின்
மானம் மரியாதை கௌவரம் எல்லாவற்றையும் குழிதோண்டி ஒரே அடியாக புதைத்துவிட்டான்
தங்கை அன்றோடு கல்லூரி படிப்பை ஏறகட்டி விட்டாள் அன்றைக்கு பார்த்த அவள் முகத்தை அந்த நாள் தொட்டு வெகு நாள் வரை அவள் முகத்தை பெற்றவர் முதல் கொண்டு யார் முகத்தை யும் அவள் பார்க்க விரும்பிய ்தில்லை
வெட்டு பட்ட பையனுக்கு வெட்டப்பட்டவரால் மாதாமாதம் ரூபாய் பத்தாயிரம் நஷ்ட ஈடாக வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அண்ணன் விடுதலை ஆகி வந்தான் தங்கையை பற்றி விஷயம் காதில் விழுந்தது பாம்பை தலையில் அடிக்கனும் தேளை வாலில் அடிக்கனுமுன்னு கேள்வி பட்டிருக்கிறேன் பாம்பை தலையில் தான் அடித்தேன் அது வாலில் விஷமுன்னு தெரியாமல் போச்சி அடிக்க போனவனையே அடித்து விட்டது அந்த அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கி விட்டான் சொத்து பத்து எல்லாம் தங்கைக்கு ஆகிவிட்டபடியால்
தன் வேஷங்களை கலைத்து இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வந்தாள் தெரிந்தோ தெரியாமலோ அண்ணன் செய்த தவறுக்கு தங்கை பரிகாரமாக காதல் கடிதம் கொடுத்தவனுக்கே தன்னை தன் ஆசாபாங்கள் அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்டு தனக்கென ஒரு கருணை தேசம் ஒன்றை புதிதாக அமைத்து அமைதியாக வாழ புறப்பட்டாள்
அண்ணனின் வெட்டுப்பட்டு கிடப்பவனை சந்தித்து கேட்டாள்
""நான் உங்க கூட வாழணுமுன்னு ஒரு முடிவோடு வந்துட்டேன் ""என்றாள்
""எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லவே இல்லைங்க"" என்றான்
""அப்புறம் எதுக்கு என் பின்னால் சுத்தினீங்க லவ் லட்டர் ஒரு பொண்ணு கையிலே கொடுத்து எனக்கு கொடுக்கச்சொன்னீங்க""
""தயவுசெய்து அந்த பொண்ணை கொஞ்சம் கூப்பிட முடியுமா ""
அந்த பெண்ணை கூப்பிட அவளும் வந்தாள்
கேளுங்கள் லவ் லட்டர் உங்க கிட்ட கொடுக்கச் சொல்லி கொடுத்தது யாருன்னு கேளுங்கள்
""அய்யய்யோ..இவரு இல்லடி அந்த சிவப்பு மோட்டார் சைக்கிளில் வருவானே அவன்தான் ""
""கேட்டு கிட்டீங்ளா""என்றான் வெட்டுப்பட்டவன்
""அப்போ என் பின்னால் சுத்தினது நீங்கள் தானே """
""ஆமாம் சுத்தினது வாஸ்தவம் தான் ஆனால் உங்களுக்கு என்னால ஒரு தொல்லையும் கொடுக்கப்படல உங்களிடம் நானாக பேசினதே இல்லை உங்களை பேச வச்சதும் இல்லை உங்க பின்னால் சுத்தினதுக்கு காரணம் இருக்கு ""
""என்ன காரணம் அது""
""இப்போது இந்த பாப்பா சொன்னதே அந்த பையன் ஏற்கனவே மூனு பொண்ணுங்களை நாசம் பண்ணி அந்த பொண்ணுங்க அவன் செஞ்ச காரியத்தினால் அவுங்க அப்பா அம்மா படிச்சது போதும் என்று நிறுத்தி ட்டாங்க
இப்போது வெளியில் தலைகாட்ட முடியாது மூலையில் முடங்கி கிடக்கிறாங்க ""
தானே வரும் வரனும் சரி; இல்லை இவங்களா தேடும் வரனும் அக்கம்பக்கம் விசாரிக்க எல்லாம் கையைக் காட்டி விட்டு போயிடுறாங்க இந்த அவமானம் தாங்காமல் பொண்ணு க்கு அப்பா இரண்டு தடவை தற்கொலை க்கு முயற்சித்து தடுத்து நிறுத்த ப்பட்டவர் வேற....""
""அந்த கதை என் காதில் விழுந்தது அவனை அவுங்களால் ஒன்னும் பண்ணமுடியல அடுத்து அவன் உங்க மேல குறிவைத்து இருப்பது எனக்கு தெரியும் அவனை தடுக்க நான் எடுத்த முடிவு தான் நான் செய்தது அவன் ஒரு பெரும் புள்ளியோட மகன் அவனை இந்த கல்லூரி பக்கம் வராத படிக்கு பண்ண என் நண்பர் களோடு போட்ட ப்ளான் ""
""அதுக்கும்...நீங்கள் என்பின்னால சுத்தினதுக்கும் என்ன சம்பந்தம் ""
நான் உங்க பின்னால் சுத்துவது அவனுக்கு தெரிஞ்சா அவனாவோ இல்லை ஆளைவிட்டோ
என்னை அடிக்க முயற்சி பண்ணுவான்
அப்போது நானும் நண்பர்களும் அவனுக்கு முடிவு கட்ட லாம் அந்த பாதிக்கப்பட்ட பொண்ணுக்கு ஏதாவது உதவலாம் என்றிருந்தோம்
அதுக்குள்ள உங்க அண்ணன் பிளான் பண்ணி என்னை இப்படி படுக்க வச்சிட்டார் இதுதான் உண்மை நீங்க ஏணி வச்சி ஏறினாலும் எட்டாத தூரத்தில் இருக்கும் உங்களை கனவாக கூட நான் கண்டதில்லைங்க என்றான்
அவளுக்கு தலையே சுற்றி விட்டது
தண்ணீர் தெளித்து சரிசெய்து பின்
உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்டாள்
எனக்கு ஆறு தடவை கல்யாணம் ஆச்சி
ஆறு பிள்ளைக்கு தவப்பன் என்றான்
என்ன ஜோக்கா....அவனது நண்பர்களிடம்...என்ன...சொல்கிறார்.. உங்க நண்பர் என்று அவர்கள் இடம் விசாரிக்க
இவையெல்லாம் நடந்தது உண்மை தான் ஆனால் நிஜமாக இல்லை நாடக மேடையிலே அவன் ஒரு நாடக நடிகன் வீட்டில் கடைக்குட்டி என்பதால் கொஞ்சம் துடுக்கு அச்சம் என்பது மடமையடா கேட்டகிரி
ஆனாலும் நாம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி கொள்கிறோம்
ஐயோ நான்.......
உயர்வோ தாழ்வோ இரண்டையும் தீர்மானிக்கும் நம்முடைய மனசு தான் நீ என்ன வாவது இருந்து ட்டுபோ..அப்படி யே எனக்கு புருஷனாவும் இருந்துட்டுப்போ
நான் வர்றேன்.
°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி
கண்டம்பாக்கத்தான்
மும்பை மகாராஷ்டிரா