ரெட்டவட சங்கிலி
இந்த ரெட்டவட சங்கிலி
அம்மாவின் கழுத்தில்
இருந்ததை விட
அடகு கடையில் இருந்ததே
அதிக நாட்கள்
அப்பாவின் விவசாய செலவு
என் கல்வி கட்டணம்
அக்காவின் திடீர் மருத்துவச்செலவு
எதிர் பாராத பயணச்செலவு
எல்லாம் இந்த
ரெட்டவட சங்கிலியின்
தயவு தான்
வீட்டுக்கும்
அடகு கடைக்கும்
பயணிக்கும்
இந்த ரெட்டவட சங்கிலி
அம்மாவின் அம்மா வீட்டின்
சீதனம்
இந்த முறைத்தான்
இந்த சங்கிலி
என் கழுத்தில்
நீண்ட நாட்களாக
ஒட்டி உரசி உறவாடுகிறது
என அம்மா சொன்னாள்
சொல்லி வாய் மூடவில்லை
வந்தது வினை
அடுத்த போகத்தில்
மீட்டுக்கொடுக்கிறேன்
என அப்பா வாங்கி
விவசாய செலவு செய்தார்
இம்முறை சற்று
அதிக தொகைக்கே
அடகு வைக்கப்பட்டது
ஆறு போகம்
முடிந்து விட்டது
வந்த விளைச்சல் எல்லாம்
கைக்கும் வாய்க்குமாய்
போனதே தவிர
ரெட்டவட சங்கிலி
மீட்க முடியாமலே போனது
இம்முறை
அம்மா அப்பாவிடம்
வேறு எதோ நகை கொடுத்தாங்க
அப்பா தாயாரானார்
இந்த போகம் பயிர்ச்செய்ய...
யாரோ சொன்னங்களாம்
நெல்லு வயலிலே
கெண்டை வளர்த்தா
கொள்ள லாபமுன்னு
பாவம் அப்பா...