வலியின் ஆழம் அறிவாயோ - 2
உடலெங்கும் வெப்பம் பொங்கி வழிய மடிக்கணினி ஒரு காரணமாக இருக்குமோ என்று அறிந்த நேரம் மடிக்கணினியின் இயக்கம் நிறுத்திவிட்டு நன்கு உறங்கினேன்.
உடலெங்கும் பொங்கிய வெப்பம் குறைந்தது.
இன்னும் குறைய என்ன வழி?
வெயர்வை வெளிவர உழைக்க வேண்டும்.
ஐயோ! காற்றாடி என்ற கருவி வெயர்வை சுரக்காது தடுக்கிறதே.
வெளியிலே சூரியன் தகிக்கிறான்.
தெருக்களில் நடப்பது இயலாத காரியம்.
ஏனெனில் அவனது பார்வை என் மேல் சற்று உக்கிரமாகவே படிகிறது.
தகிக்கும் வெப்பத்தில் விலா எலும்பின் அமைப்பிற்கு கீழே, நரம்புகள் வலியெடுக்க, நோய் என்ற அச்சரம் உடலில் புகுந்து மனதை அலைக்கழிக்க,
உடலின் நிகழ்வுகளை ஆராய்ந்தே எழுதுகிறேன்.
நரம்புகளின் அவ்வலியின் ஆழம் சிறிதேனும் அறிவீரோ?