வாழ்க்கையெனும் போர்க்களம்

வாழ்க்கையெனும் போர்க்களம்
கவிதை by: கவிஞர் பூ.சுப்ரமணியன்

கருவறையிலிருந்து
கல்லறை வரைக்கும்
மனித வாழ்க்கையே
இனிய போர்க்களம் !

குழந்தையைப் பெறும்
அம்மாவுக்கு
பத்து மாதமும்
இன்பப் போர்க்களம் !

தாயின் கருவில்
இருளில் சுழன்ற சிசு
வெளிச்சத்தைக் காண
துடித்த துடிப்பும்
ஒரு போர்க்களம் !

வளர்ந்த பிள்ளையை
பள்ளியில் சேர்த்து
படிக்க வைப்பதும்
தந்தையும் தாயும் நாளும்
சந்திப்பது போர்க்களம் !

படிக்கும் மாணவனுக்கு
பரீட்சை வந்து விட்டால்
தேர்வு முடிவு வரைக்கும்
கல்விக்கூடமே
ஒரு போர்க்களம் !

இல்லற வாழ்வில்
உள்ளம் மகிழ
நல்ல மனைவி மக்கள்
அமைவது வரைக்கும்
இல்லறமே போர்க்களம் !

இளமையில் மகிழ்ந்து
முதுமையில் நோயின்றி
வாழ்ந்து கல்லறை
செல்லும் வரைக்கும்
வாழ்க்கையே போர்க்களம் !

உலகில் மனித
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கலாம் !

வாழ்க்கையெனும் போர்க்களம்
நாம் நினைத்தால்
அமைதிப்பூங்காவாக மாற்றலாம் !

பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (31-May-18, 12:14 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 134

மேலே