சரியான முடிவு

#சரியான_முடிவு...

துறவி...
இந்த சொல்லை அனுபவமாக உணர நினைத்தேன்.
அரசனாக இருந்தேன்.
நாட்டைத் துறந்தே காடு வந்தேன்.
காட்டில் பசி வந்திடும்,
பழங்களைப் பறித்துண்பேன்,
தாகம் எடுத்திடும்,
ஆற்று நீரை அள்ளி பருகுவேன்.
குளிரும், வெயிலும் மாறி மாறி மிரட்டும்,
என்ன செய்வது?
அனுபவம் பெற்ற ஆக வேண்டும்.
மழை நீரில் நனைந்திருந்தேன்.
அங்கே ஒரு குரல் கேட்டது.
" அன்னை மடி பிறந்த அரசனே நீ துறவியாக நெஞ்சில் வேண்டும் வைராக்கியம்.
அந்த வைராக்கியத்தின் அளவு எவ்வளவு என்றால் நீ சுவாசிக்கும் மூச்சை அப்படியே நிறுத்தும் அளவிற்கு. தினமும் பயிற்சி செய்,
"என்று மறைய, எனக்குள் ஒரு வைராக்கியம் கொண்டேன்.
மூச்சை நிறுத்த முடியும் வரை பயிற்சி செய்து செய்து மூச்சை நிறுத்த, இப்போது அந்த வைராக்கியத்தைத் துறந்திடு என்றது அதே குரல்.

ஆறாம் அறிவில் ஒரு பொறி தட்டியது.
துறப்பது என்பது முடிவில்லா பயணம்.
எல்லாரும் வெற்றுக் கை மண்ணை உதறிவிட்டுத் துறவி என்கிறார்கள்.
அளவில்லா சிரிப்பு மேலிட துறவு என்ற சொல்லை துறந்தேன்.
அகிலத்தின் நன்மைக்காக என் கடமை செய்யத் தயாராகினேன்.
மீண்டும் அதே குரல்,

" இப்போது தான் சரியான முடிவு எடுத்துள்ளாய். வாழ்த்துகள். " என்று.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Jun-18, 7:16 pm)
Tanglish : sariyaana mudivu
பார்வை : 536

மேலே