வட்டிக்கு வட்டி கட்டி

ஒரு நாளா இரு நாளா
மாசமெல்லாம் வங்கி படிகள் ஏறி
தவமிருந்து வாங்கிய கடனில்
முட்டாள்தனம் செய்தேனே

மாடு பண்ணை போட்டிருந்தால்
இந்நேரம் பால் பண்ணை உருவாக்கி
சுளையாய் வருமானம்
மாதா மாதம் பார்த்திருப்பேன்

காடு நிலம் வாங்கி இருந்தால்
விளைச்சல் வரும் போதெல்லாம்
வீட்டில் பணம் சேர்த்திருப்பேன்

வீடு கட்டி முடித்திருந்தால்
வாடகைக்கு வீட்டை விட்டே
வேறு வீடு வாங்கி இருப்பேன்

எவரோ சொன்னது கேட்டு
பொறியியலை படித்து விட்டேன்
படித்த படிப்பிற்கு வேலை இல்லை
கிடைத்த வேலை போதவில்லை

வாங்கிய கடனுக்கோ
வட்டி கட்டி மாளவில்லை

அழுகையை மறைத்தபடி
சிரித்துக்கொண்டு திரிகின்றேன்
வட்டிக்கு வட்டி கட்டி...!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (1-Jun-18, 8:38 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 90

மேலே