இசையென்னும் கவிதை 10 அனாதை இல்லம் தந்த நல்முத்து ஏன் செல்வம்

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த காணொளி:

மனைவி சொல் கேட்டு தந்தையை அனாதை இல்லத்தில் மகன் சேர்க்கிறான். அவர் மனைவியிடம் தீபாவளிக்கு கூட வரமாட்டார் என்று உறுதி அளிக்கின்றான். மீண்டும் உள்ளே வரும்போது நிர்வாகியினை சந்திக்கின்றான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இதே அனாதை இல்லத்திலிருந்து தான் தத்து எடுக்கப்பட்டதை அறிந்து துடிக்கிறான் இதனை கவிதையாக படைத்திருக்கிறேன் நன்றி

அனாதை இல்லம் தந்த நல்முத்து என் செல்வம்

அனாதை இல்லம் தந்த
நல்முத்து என் செல்வம்
கடல் கடந்து போகையிலே
எனை சேர்த்தான் அவ்விடத்தே

வறண்ட விழிகளில் திரண்ட
வெண்முத்துக்கள் சிதறியதோ தனித்தனியாய்
துவண்ட உள்ளத்தினை அணைத்திடவே
உறவறுந்த நல்இதயங்கள் துடித்தனவே

தாழியிலே திரண்ட வெண்ணை
அள்ள நினைக்கையிலே உடைந்ததுவே
அனாதையென்று வளர்த்த செல்வம்
எனையும் அனாதையாக்கிச் சென்றதுவே

அறிந்திலேன் இறைவன் திருவிளையாடல்
எனை தத்தெடுக்கும் நாளென்னாளோ
அனாதை இல்லம் தந்த
நல்முத்து என் செல்வம்

இதன் இசை வடிவம் youtube இணையதளத்தில் :https://youtu.be/cStlDbfP0kQ

எழுதியவர் : ராஜேந்தரன் சிவராமபிள்ளை (1-Jun-18, 4:12 pm)
பார்வை : 93

மேலே