உன்னுடன் நான்

நான் காற்று என்றால் உனக்குள் சுவாசமாகிறேன்
நான் இமை என்றால் உன் கண்களை பாதுகாக்கிறேன்
நான் இன்னிசை என்றால் உன் செவிகளில் என்றும் ஒலிக்கிறேன்
நான் ரேகை என்றால் உன் கைகளுடன் இணைந்திருக்கிறேன்
நான் பூக்கள் என்றால் உன் பாதைகளில் மலர்கிறேன்
நான் துடிப்பு என்றால் உன் இதயத்தில் துடிக்கிறேன்
நான் இரத்தம் என்றால் உன் உடலெங்கும் ஓடுகிறேன்
நான் உயிர் என்றால் உன் மெய்யோடு வாழுகிறேன்
உன்னுடன் நான் ஒன்றாகிவிட்டேனே
நமக்கு பிரிவு என்பதே கிடையாதே
மரணம் நம்மை பிரிக்க நினைத்தாலும் மதியிழந்து போகுமே
எவ்வுலகிலும் எப்பிறவியிலும் நாம் இணைபிரியாது வாழ்ந்திருப்போம் என் அன்பே !!!