தாய்மையின் தவிப்புகளின் தேடல்

தாய்மைத் தவம் தேடும் விழிகளின்/
தவிப்புகளின் தேடல் ஓயவில்லை//

எதனைக் கொண்டு நிரப்புவது//
என் உணர்ச்சியை வெளிப்படுத்தவும் இயலவில்லை//

இருண்ட வாழ்வென
இரந்து யாரும் பார்க்கவில்லை //

இறைவனின் அலட்சியமும் /
இதயத்தில் வேதனை குறையவில்லை //

காத்திருக்கும் கனவுகளோ //
கண்ணில் நீராக போகவில்லை //

அவலம் தரும் சமூகம் //
அருகிலிருக்க வேதனையை கூறமுடியவில்லை

பிறரோடு பேசவும் மனமில்லை /
பிள்ளை ஆசையை தடுக்கவும் முடியவில்லை //

வாழும் காரணமும் நான் அறியேன் //
வந்த நோக்கமும் புரியவில்லை

எனை ஆட்டுவிக்கும் ஆசையும்//
என்னை பிரியவில்லை
மயக்கமும் இன்னும் குறையவில்லை

எழுதியவர் : காலையடி அகிலன் (5-Jun-18, 4:59 am)
பார்வை : 60

மேலே