ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தேவை இல்லை
உயிர் பலி வாங்கும்
நீட் தேர்வு !

சிரிப்பாய் சிரிக்குது
சிரிப்பு நடிகரை
கைது செய்யாததற்கு !

முத்துநகரில்
கண்ணியம் இழந்தது
காவல்துறை !

தீவிரவாதிகளுக்கான
நவீன துப்பாக்கிக்குண்டுகள்
பொதுமக்களுக்கு !

பாவிக்காக
அப்பாவிகள்
உயிர்பலி !

சிலர்
கடவுளை மிஞ்சிய
பூசாரியாகின்றனர் !

பிறப்பு முதல் இறப்பு வரை
போராட்டமே
வாழ்க்கை !

கொலையும் செய்வாள்
பத்தினி
காமக்கொடூரனை !

அண்ணன் தம்பி
உறவில் விரிசல்
திருமணமானதும் !

மீண்டும் நிரூபித்தார்
மனநோயாளி என்பதை
நடிகர் !

இறுதி நாட்களில்
மகனை விட மகளை
விரும்பிடும் அம்மாக்கள் !

அளவிற்கு மிஞ்சினால்
காமமும்
நஞ்சுதான் !

முடித்து விடுவார்
இலஞ்சம் வாங்கினால்
ரெம்ப நல்லவர் ?

ஆயிரம் வாங்கியோர் சிறையில்
கோடிகள் வாங்கியோர்
பிணையில் !

பெருகிவிட்டனர்
முதிர்கன்னிகள் போலவே
முதிர் காளைகள் !

தடை என்பார்கள்
கவனித்ததும்
நீக்குவார்கள் தடை !

மதுக்கடை திறப்பதில்
உள்ள ஆர்வம்
இல்லை பள்ளிகள் திறப்பதில்!

பக்தர்களே
இருங்கள் கவனமாக
சாமியார்களிடம் !

தொண்டுக்கு அன்று
துட்டுக்கு இன்று
அரசியல் !

அரசியல்வாதிகளின் நடிப்பில்
நடிகர்கள்
தோற்கிறார்கள் !

அரசியல் தகுதியில்
பித்தலாட்டத்துடன்
நடிப்பும் சேர்ந்தது !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (5-Jun-18, 8:14 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 159

மேலே