மரப்பெண்

மழைக்காதலனைப் பார்த்த மகிழ்வில்
நாணம் மறைக்க நிலம் பார்க்கிறாள்
பூஞ்சாரலோ புயல் வேகமோ
பூரிப்புடனே ஏற்று நனைகிறாள்
விலகிடும் வேதனையில் அவளின்
கண்ணீராய் கடைசிமழைத்துளி!!

எழுதியவர் : சஹானா (7-Jun-18, 9:56 am)
சேர்த்தது : சஹானா
பார்வை : 87

மேலே