நான் சிறைப்பட்டவள்

நான் சிறைப்பட்டவள்
என்னை
ஒரு சிறையிலிருந்து
மற்றொரு சிறைக்கு
மாற்றி விடாதே!
என் சிறகுகளை
பறக்கவிடு!
எண்ணங்களை
மேண்மையுறச் செய்
நான் வானவில்லாய் மாறி
வானத்தைத் தொட
ஆசை கொள்கிறேன்!
அறைக்குள்ளேயே
நடமாடுமளவிற்கு உன்
ஆணாதிக்க சங்கிலியால்
பிணைத்திடாதே!
என் கால்கள் வெகுதூரம்
பயணம் கொள்ள
விரும்புகிறது!
ஆடை அவிழ்த்து
உடல் வாடை பிடித்து
காமம் கழித்திட
மட்டுமா? நான்!
உன் எண்ணம் பகிர்
என் தனிமை அறு!
ஆசையை கேள்
இதயத்தின் ஓசை கேள்!
எனக்கான நேரம் ஒதுக்கு!
நான் சிறைப்பட்டவள்
என்னை
ஒரு சிறையிலிருந்து
மற்றொரு சிறைக்கு
மாற்றி விடாதே!