நீ!
ஏவாள் நீ
காவியப் பெண்மணி!
கண்ணகி நீ
கற்புடைப் பைங்கிளி!
நீலாம்பரி நீ
வெறிகொண்ட வெண்ணிலா!
ஆண்டாள் நீ
பண்புடைய பட்டாம்பூச்சி!
மேகம் நீ
கொடைவள்ளல் குருத்து!
மோகம் நீ
காதலின் கருத்து!
பிறைநிலா நான்
முழுநிலவாக ,
பூமி
உன்னையே சுற்றுகிறேன்!