மானுடப் பறைகளே!
சிற்பமயம் ஆன
என் குல மாந்தரே!
தோற்றம் பொலிவுடைத்தும் மனம்
மட்டும் பொலிவிழந்ததேன்?
மானுடப் பறைகளே!
சமத்துவம் காணச் சாற்றுங்கள்!
சாதி சலிக்கச் சாற்றுங்கள்!
மதம் மடிக்கச் சாற்றுங்கள்!
குலம் கிழிக்கச் சாற்றுங்கள்!
இறைவன் படைத்த உலகினிலே
இறைபெயர் சொல்லி மோதுகிறோம்!
இருபால் மாந்தர் இருக்கையிலே
இனத்தைப் பிரித்து வாழ்கிறோம்!
காலம் மா(ற்)ற உழைத்திடுவோம்
சமமாய் வாழ்ந்து தழைத்திடுவோம்!