அவனும் அவளும்

அவன்:

ஆஹா...
இது என்ன மாயம்
என்னில்
நீ போடும் கோலம்
உள்ளம்
உன் பக்கம் சாயும்
கண்கள்
உன்னழகை மெல்ல
மெல்ல மேயும்
நெஞ்சத்தின்
படபடப்பு எப்போது ஓயும்

அவள்:

தேயும்
நிலவைப்போல் நானும்
உன்னால்
ஆசைகள் நெஞ்சில்
ஊறும்
காணும் யாவிலும்
உன் பிம்பம்
இது காதலின் அறிகுறி
என்று சொல்லும்
மீசை எப்போது
என்னைத் தீண்டும்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (10-Jun-18, 5:36 pm)
Tanglish : avanum avalum
பார்வை : 123

சிறந்த கவிதைகள்

மேலே