ஓட்டை விழுந்தது ஓட்டினால்

வெகுதூரம் விலகி
நிற்கிறது எங்கள்
வெகு ஜனங்களை
நிகழும் அரசியல்
ஜனநாயகம்...!
அது அதுதான்
முட்கள் தைத்த சவுக்கை
தீ வைத்து விலாசி விட்டு
பொருளியல் என்ற
மருந்து தடவி
கிளறி பார்க்கிறது
வழன்றுவிட்ட
சதையையும் மனதையும்...
ஒற்றை விரலை
நியாமாய் நீட்டாமல்
உள்ளங்கை நீட்டியதற்கு...
தன் பணத்தை
தர்மமாய் வாங்காமல்
தனக்கென மட்டும்
வாங்கியதற்க்கு...

எழுதியவர் : சுரேஷ் குமார் (10-Jun-18, 6:23 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 232

மேலே