ஒரு வாரம் ஐந்து வருடங்கள்

அது சந்தை
சப்தங்கள் கிடந்து ஓடின.
சந்தையில் இருக்குமே
சப்தங்களும் ஓசைகளும்.
சந்தை வளர்ந்தது
ஊமைப் பொருட்கள்
உட்கார்ந்து முறைத்தன
குப்பைகள் சிரிக்க...
யாரோ வந்து எதையோ எடுத்து
போனவர் வந்தார்கள்
வந்தவர் போயினர்.
சந்தையில் சிந்தையில்லை.
சப்தமும் ஓசையும்
ஆந்தையும் காகமுமாய்.
பொருட்கள் வெயிலில்
பளபளத்து கிடந்தன
ஒவ்வொன்றிலும் ஒரு சூரியன்.
சூரியன் நகர நகர
சந்தை கிளர்ந்தது
ஓசைகள் குறுகின...
அடுத்த சந்தை
அடுத்த வாரம்...
சப்தமும் ஓசையும் உண்டு.
தேர்தல் போலத்தான்.

எழுதியவர் : ஸ்பரிசன் (9-Jun-18, 7:33 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 230

மேலே