நான் சிக்கியது

சிறகு முளைத்ததும் தவிக்கிறேன்
பறக்க முடியாமல் ,
கூட்டுக் கிளியென ,
கூறுகெட்ட மானிடர்களால்.

வேதங்கள் பலச் சொல்லி
அடைத்தார்கள் வேற்றுமையில்
எனினும் வேற்றுமை விலங்கை திறந்து
விடுதலை அடைவோம் ஒற்றுமையில் .

கடக்கப்போகும் கனம்
கட்டாயம் இல்லை கரத்தில்
எனினும் வைத்து துவளாதே
கரத்தை சிரத்தில்.

செய்வதறியாது செய்வது பிழைகள்
செய்வதரிந்து செய்வது குற்றங்கள்
திங்களை போல் குற்றகளை சரி செய்யலாம்
ஞாயிறு போல பிழைகளை தண்டிக்கலாம்.

மானிடர்களே மறவாது சிந்தையில் வையுங்கள்
மறதிதான் துரோகத்தின் தோழன் என்று .

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (9-Jun-18, 6:47 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
பார்வை : 542

மேலே