நான்காண்பதெல்லாம் கண்ணனே

,
கார்மேகம் கண்டேன் -அது
நீயாய் மாறி, எனக்கு
காட்சி தன்தாய்க் கண்ணா

நீலத்திரைக் கடலில்
பொங்கி எழும்
அலைகள் கண்டேன்
அதில் நீயே தோன்றி
அலையும் நானே
ஆழ்கடலும் நானே என்று
கூறி காட்சி தந்து
புன்னகையும் தந்தாய்
என் காதலனே கண்ணா

மாலைப்பொழுதில் அன்று
ஒரு நாள் நதிக்கரை நோக்கி
நடக்கையில், வழியில்
புதரில் மூங்கில்கள் கண்டேன்
இன்னும் வண்டுகள் ரீங்காரம்
எழுப்பி அந்த முற்றிய மூங்கில்களை
துளைப்போடுவதை கண்டேன்
அதை நின்று பார்த்து
அதிசயத்தபோது,வீசும் தென்றல்
இம்மூங்கில்களைத் தடவ ,அங்கு
எழுந்ததோர் அற்புத குழலோசை
அது மெல்ல என் அதில் வந்து
என்னைத்தெரியலையா, நானே
நீ தேடும் கண்ணன் என்றது

இப்படி என் கண்கள் காண்பவை
அத்தனையும் நீயே கண்ணா
என் உள்ளம் முழுவதும் நீதான் கண்ணா

என்னுள் நீயே என்றானபின் -நான்
யார் கண்ணா சொல் நீதானே
கள்ளனே, நீதானே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Jun-18, 11:44 am)
பார்வை : 160

மேலே