வசந்தங்கள் வரமாகட்டும்

மனதுக்கினியவர்
வாழ்வில் இனி அவர்...
மணமகள் வைசாலியின்
மனதில் மகிழ்ச்சிப் பிரவாகம்...
மணமகளின் ஆனந்தக்
கண்ணீர் சொல்லியது...

பெற்ற வெற்றிகள்
பெறப்போகும் வெற்றிகள்...
எல்லாமே இரண்டாம்பட்சம்
மணமகன் முகிலுக்கு
வைசாலியைக் கரம்பிடித்து
வெற்றி கொண்ட பின்...
இது ஒன்றே போதும்
வேறென்ன வேண்டும்...
எனும் உணர்வு...
மணமகன் உடல்மொழி
சொல்லியது...

மணமகன் மணமகள்
மனசும் மகிழ்ந்தது...
மங்கல யோகங்கள்
இனிதே பிறந்தது...

மகளின் திருமணம்
சிறப்பாய் நடந்தேறியதில்
மன நிறைவில் நண்பன்
செல்வ விநாயகம்
அவர்தம் வாழ்க்கைத்துணை
திருமதி அலமேலு...

சீரோடும் சிறப்போடும்
நடைபெற்ற
திருமண விழா அபாரம்...
வைசாலி முகில்
ஜோடிப் பொருத்தம் அற்புதம்..

மணமக்களை வாழ்த்தியதில்
மனம் மகிழ்ச்சி கொண்டது...
நண்பர்கள் பலரைக் கண்டதில்
உள்ளம் உவகை கொண்டது...

இனிய புதுமணத்
தம்பதியரே...
முதன்மையானவற்றை 
முதலாய்ச் செய்து... 
முடிவினை மனதில் வைத்த
ஆரம்பம் கொண்டு... 
செயல்களை முந்திச் செய்து... 
புரிந்தபின் புரியவைத்து... 
ஜெயிக்கவிட்டு ஜெயித்து... 
ஒன்று பட்டு உழைத்தால் 
பத்தும் பத்தும் இருபதல்ல 
அதற்கும் மேல் என்பதறிந்து... 
வெற்றிகளை நோக்கிய பயணத்தில்
கத்திகளை வெல்லும்
கூர்மையான புத்தியும் 
ஆகிய ஏழு ஸ்வரங்களின் 
இனிய ராகங்களில்... 
வழிகளும் வானமும் வசப்படட்டும்...
வசந்தங்கள் வரமாகட்டும்...

இல்லறப் பூங்காவில்
உலா வரப்போகும்
உல்லாசப் பறவைகளே!
செல்வங்கள் பதினாறும் பெற்று
இனிதே வாழ்க...
இன்பமாய் வாழ்க!!
நீடூழி வாழ்க...
நிலைத்த புகழோடு வாழ்க!!!
👍🎂🍰😀🙋🏻‍♂🌹🌺

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (13-Jun-18, 9:13 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 239

மேலே