அவளை பார்த்தேன்
கடவுளால்
உருவாக்கப்பட்ட
இந்த உலகில்
இயற்கையாய்
அமைந்துள்ள
மரங்களின்
ஆட்டத்தினால் வந்த
அந்த காற்று
நெற்பயிரை
போல
இருக்கும்
அவள் கூந்தலை
உரசிப் போக
கலைந்த
அந்த கூந்தல்
கண் மூடும்
வகையில் என்
முகத்தில்
மோதியது.......
நான்
சிலிர்த்து போனேன்
என்
சில்ர்த்து போன
தேகத்தோடு
அவளை
பார்க்க
நான்
திகைத்து போனேன்
அந்த
திகைத்து போன
முகத்தோடு
அவள்
கண்ணை
பார்க்க நான்
சிதைந்து
போனேன்.......
அன்று தான்
வியந்து போனேன்
இறைவன்
படைப்பில்
இப்படி
ஒரு
பிரம்மாண்டமா ?
என்று.....
அன்று தான்
தெரிந்தது
காதலுக்கு
இயற்கை
என்றும்
உதவுமென்று....
இறைவனுக்கு
நன்றி
சொல்கிறேன்
இந்த
பூமியில்
என்னை
படைத்ததற்கு
அல்ல....
என் முன்
அவளை
காண
செய்ததற்கு..............