காணாமல் போயின

காணாமல் போயின

கடிதங்களும்

ஒரு ரூபாய் தொலைபேசியும்

காணாமல் போயின

நாட்டுக்கோழி குழம்பும்

மண்பானை சமையலும்

காணாமல் போயின

வெள்ளைச் சட்டையும்

காக்கி ட்ரௌசரும்

காணாமல் போயின

மண்ணெண்ணெய் விளக்குகளும்

விறகு அடுப்புகளும்

புதுமை வளர்ச்சி என்று

இன்னும் எத்தனை நினைவுகளை

அழிக்குமோ நம் சமூகம்!

எழுதியவர் : நா.கோபால் (16-Jun-18, 9:02 am)
சேர்த்தது : நா கோபால்
Tanglish : kanaamal poyina
பார்வை : 56

மேலே