கொள்கையை விற்பவர் திருடர்

'கொள்கை மாற்றல்
திருட்டுத்தனம் காண் '
என்று கூறுவார் பாரதிதாசன்
அப்படி கொள்கை மாறுபவர்
திருடரேயாவார் .........இன்று
நாட்டில் பலகட்சிக்காரர்கள்
திடமாய்த் தங்கள் கட்சிகளின்
கொள்கைகளில் நம்பிக்கை
வைப்பவர் அல்லர், இவர்கள்
தங்கள் சொந்த வாழ்வின் முன்னேற்றத்திற்கு
இந்த கட்சிக்கொள்கைகளை எல்லாம்
காற்றில் பறக்கவிடுவார் , தக்க தருணம்
கிடைப்பின் ஏற்ற காட்சியைத் துறந்து
எதிர் கட்சியில் சேர்ந்துவிடுவார்-ஒரு
கட்சியின் ஆட்சியை கவிழ்க்க -இவர்கள்
எட்டியாப்பார்களே அல்லவா ...மக்கள்
இத்தர அரசியல் விபச்சாரிகளை மக்கள்
ஏன் கண்டுகொள்வதில்லை, தண்டிக்க
தயங்குகிறார் ............நல்ல ஆட்சிக்கு
சுயநலமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட
அறிவுடை மனிதர்கள் தேவை ..............
அரசியல் ஓநாய்கள், குள்ளநரிகள் அல்ல
குதிரைப் பந்தயம் வேண்டாம் என்று
கூறிய அரசியல் தலைவர்கள் ...
அரசியலில் பகிரங்கமாய் குதிரை
வியாபாரம் நடத்துவது விந்தையே
இதை அறிந்தும் அறியாததுபோல்
நீதி கண் மூடி இருப்பதேன்.......
ஒளிபடைத்த கண்கள் 'அவன்'தந்தும்
விழிப்பு கொள்ள வில்லை என்றால்
வீணாய் துயரம் கொண்டு யாது பயன்.
விழித்துக்கொள்வாய் உறுதிகொண்ட
நெஞ்சினராய், வீணரை விரட்டிடுவோம்
நல்லோருடன் கூடி வாழ்வோம்
மற்றோரை வாழவைப்போம்........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jun-18, 6:56 am)
பார்வை : 51

மேலே