விழித்திடு மனிதகுலமே

காலங்கள் கடந்து விட்டது
காடுகளும் அழிந்து விட்டது
கழனி எல்லாம் கட்டிடமாய் உயர்ந்து விட்டது
ஏன் இந்த மாற்றம் என கேட்கத்தான் நாதியில்லை
முன்னேற்றம் என எண்ணி ஏமாற்றமே மிஞ்சி போகிறது உண்ண உணவில்லை
கழனி அழித்து வீடு கட்டி சொகுசாய்
படுத்துகொண்டோம்
இன்று பிளாஸ்டிக் அரிசி உண்கிறோம்
நிலத்தடியில் நீர் இல்லை வான்வெளியிலும் நீரில்லை செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கா என ஆராய்ச்சி செய்கிறோம்
காடு கரை அழித்துவிட்டோம்
கால்நடைகளையும் குப்பைகளை தின்ன விட்டோம்
நிகழ்காலமே சுடுகாடாக மாறி விட்டது
எதிர்காலம் எட்டாக்கனியாகி விட்டது
ஏன் இந்த சோதனை என்று சிந்திக்காமல் வேதனையில் வாழ்ந்திடவே பழகிவிட்டோம் இயற்கையின்றி நாம் இல்லை என புரியும் நாள் வரும்
அன்று நம் மூச்சு அடங்கியிருக்கும்
வாழ்வியலை அழித்துவிட்டு வாழ்ந்திட நினைக்கும் மானிடா
உன் அறிவு கண்ணை திறந்து பாரடா....

எழுதியவர் : சின்னு (15-Jun-18, 11:54 pm)
சேர்த்தது : வேல செ லெட்சுமணன்
பார்வை : 57

மேலே