வேல செ லெட்சுமணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வேல செ லெட்சுமணன் |
இடம் | : அரியலூர் |
பிறந்த தேதி | : 15-May-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 123 |
புள்ளி | : 7 |
தமிழை நேசிக்கும் பொறியாளன்,உழவன் மைந்தன்
ஆம்
அவள் அழகிய தமிழ் மகள் தான்
அழகிய தமிழாலும்
தமிழின பண்பாலும்
அவள் அழகிய தமிழ் மகள் தான்..
21ம் நூற்றாண்டு இணையத்தில் மூழ்கிடவே...
இவளோ புத்தகங்களை தோழியாக கொண்டவள்
இளம்பெண்களை மேற்கத்திய கலாச்சாரம் வீழ்த்திடவே
இவளோ இயற்கையில் மிளிர்கிறாள்
கைப்பேசியும் கையுமாய் அலையும் பெண்களிடத்தில்
புத்தகத்துடன் திரிந்து
அம்மாவிடம் செல்லமாய்
குட்டு வாங்கியவள்
நிலவொளியை ரசித்திடவே மின்வெட்டுகாக ஏங்குபவள்
மழை மகளிடத்தில் நனைந்திடவே ஓட்டை கூரையை விரும்புபவள்
சமுதாயம் சீர்கெட்டு போகும் முன்னே
புதுமை பெண்ணை தேடுபவள்
எளிமையாய் இருப்பதையே
அணிகலன்களாய் கொண்டவள்
கோழி கோழிகுஞ்சு
ஆற்றில் நீராடி அரைத்த மஞ்சள் பூசி
ஆறடிக் கூந்தலில் பிச்சிப்பூச் சூடி
ஆத்தாள் சீலையில் தாவணிக் கட்டிடும்
அக்மார்க் கிராமத்து அழகு தேவதைகள்
புறக்கடையில் மலர்களிடம் மனம்திறந்த உரையாடல்
முன்கட்டு வாசலில் எட்டும்வரை பார்வை உரசல்
சன்னல் திரையிடையே விண்வெளி அலசல்
நாற்புற அகழிக்குள் நகர்ந்தது இவர்கள் வாழ்க்கை
வியாழன் சந்தை வெள்ளி ஐய்யனார்கோவில்
ஆண்டிற்கு ஒருமுறை வரும் ஊர்த்திருவிழா
அவ்வப்போது கிட்டும் நிபந்தனை பரோல்கள்
அதைத்தாண்டி விரிந்ததில்லை இத்தேவதைகளின் சிறகுகள்
மாற்றங்களின் ஏற்றங்களால் தேவதைகள் சிறகடிக்க
சாதிமதக் கூர்வாளால் ஆணவக்கொலைகள் அரங்கேற
வக்கிர மிருகங்களால் வன்கொடுமைக
வெண்ணிலவின் நகலெடுத்து
பன்மலரின் மணமெடுத்து
அழகோவியமாய் புவிமலரில் மலர்ந்தவளே
நின் விழிகளை நோக்கியே நகர்ந்திடுகிறது
என் நிமிடங்கள்🙈
காலங்கள் கடந்து விட்டது
காடுகளும் அழிந்து விட்டது
கழனி எல்லாம் கட்டிடமாய் உயர்ந்து விட்டது
ஏன் இந்த மாற்றம் என கேட்கத்தான் நாதியில்லை
முன்னேற்றம் என எண்ணி ஏமாற்றமே மிஞ்சி போகிறது உண்ண உணவில்லை
கழனி அழித்து வீடு கட்டி சொகுசாய்
படுத்துகொண்டோம்
இன்று பிளாஸ்டிக் அரிசி உண்கிறோம்
நிலத்தடியில் நீர் இல்லை வான்வெளியிலும் நீரில்லை செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கா என ஆராய்ச்சி செய்கிறோம்
காடு கரை அழித்துவிட்டோம்
கால்நடைகளையும் குப்பைகளை தின்ன விட்டோம்
நிகழ்காலமே சுடுகாடாக மாறி விட்டது
எதிர்காலம் எட்டாக்கனியாகி விட்டது
ஏன் இந்த சோதனை என்று சிந்திக்காமல் வேதனையில் வாழ்ந்திடவே பழகிவ
கிணற்றின் கண்ணீர்...!
வேகாத வெயில்ல... என்ன வெட்டி வச்சாங்க...
வேர் உறுஞ்சும் நீர் எல்லாம்
என்ன நெறச்சு வச்சிரும்னு...
வெல்லாம வச்சாச்சு!
விதை நெல்லும் ரெடியாச்சு!
மழை பேஞ்சு நாள் ஆச்சு!
மயில் ஆட மறந்து போச்சு!
தவளை சத்தம் காணாப்போச்சு!...
நா காதலிச்ச பம்பு செட்ட
கலட்டி வெளிய போட்டுட்டாங்க
கழனியில கால் வைக்க
கை தூக்கல்ல ஒரு பைய
தண்ணி ஓடா வாய்க்காலும்
தாகமுன்னு கேக்குதுங்க
பசுமாட்டு பசி சத்தம்
எதிரொலிக்குது எனக்குள்ள...
ஏர் இழுத்து எழுந்த நரம்பு
இறந்து விட்டது இளந்தலைமுறைக்கு
MNC என்ற எருமை – மாட்டை
மேய விட்டான் விவசாயத்துல...
போட்ட போஃர் வழியாக
பொழந்து க
பசுமையான நினைவுகளை
மெல்ல மெல்ல அசைபோடும்
தனிமையின் அழகியலை
வர்ணித்திட வார்த்தைகள் உண்டோ!
ஐப்பசி திங்கள்
ஆலங்கட்டி அடைமழை பெய்யும் தருணம்
பெட்டி நிறைய பணம் இருப்பினும்
வட்டி இல்லாமல் பெய்யும் மழைமகளையும்
எட்டி பார்க்கும் ஓர் கூட்டம்
கட்டி தங்கம் சிறிதே இல்லையெனினும்
பட்டி நிறைந்த நிரைகளை கட்டிய துண்டுடன் ஓட்டி செல்லும் மண்ணின் மைந்தர்கள்
தொட்டு பார்க்க உரிமை இல்லாதவர்களாய்
சன்னல் வழியே மழையை எட்டி பார்க்கும் பெரிய வீட்டு வாண்டுகள்
சித்திரையில் வெய்யோன் வருவான்
ஐப்பசியில் மாரி வருவாளென
திறந்திருக்கும் ஏழையின் குடிசை
பேய்மழையிலும் காடுகரைக்கு சென்று தன் பயிர்களை பார்த்து வருகிறான்-நாட்டின் உண்மைக்குடிமகன்
அடைமழை விடுமுறை ஒருமுறையாவது ஒலித்திடுமா என கால்நடை
காதலின் வறட்சி
என் காதல் கனவெல்லாம்
காற்றோடு கரைந்தோட
எஞ்சிருக்கும் நினைவெல்லாம் நெஞ்சினில் வந்துபோக
வறண்டு போன என் காதல் ஊற்றெல்லாம் மீண்டும் நனைந்திட-உன் நெஞ்சில் மா மழை பெய்திடாதோ
காதல் கடலில் நாம் மூழ்கிருக்க-உன்
மவுனத்திற்கும்,விழி அசைவிற்கும் நான் அகராதி எழுதினேன்
கடித முத்தம் நான் கேட்க
மீசை துளிரட்டும்
முத்தம் வரும் என்றாயே என் தமிழச்சி
மீசையும் துளிர்த்தது என் காதலும் அவள் இதயத்தில் சிறைபட்டது
சோதனைகளை தாங்க மனதில் வலிமையில்லை என்னவளிடம் மனதை மட்டும் அடமானம் வைத்துவிட்டேன்
ஏன் இந்த நிலையென-நான் கேட்கும் போதெல்லாம் அழகாய் பதிலுரைப்பாள் இதுவும் கடந