இது கார்காலம்

ஐப்பசி திங்கள்
ஆலங்கட்டி அடைமழை பெய்யும் தருணம்

பெட்டி நிறைய பணம் இருப்பினும்
வட்டி இல்லாமல் பெய்யும் மழைமகளையும்
எட்டி பார்க்கும் ஓர் கூட்டம்

கட்டி தங்கம் சிறிதே இல்லையெனினும்
பட்டி நிறைந்த நிரைகளை கட்டிய துண்டுடன் ஓட்டி செல்லும் மண்ணின் மைந்தர்கள்

தொட்டு பார்க்க உரிமை இல்லாதவர்களாய்
சன்னல் வழியே மழையை எட்டி பார்க்கும் பெரிய வீட்டு வாண்டுகள்

சித்திரையில் வெய்யோன் வருவான்
ஐப்பசியில் மாரி வருவாளென
திறந்திருக்கும் ஏழையின் குடிசை

பேய்மழையிலும் காடுகரைக்கு சென்று தன் பயிர்களை பார்த்து வருகிறான்-நாட்டின் உண்மைக்குடிமகன்

அடைமழை விடுமுறை ஒருமுறையாவது ஒலித்திடுமா என கால்நடையாய் காணக்கிடக்கும் வாண்டு கூட்டம்

நெடுநாள் காணாமல் போன கதிரவன்
சற்று மெல்லமாகவே பணயமாகும்
கார்மேகக்கூட்டம்

எதிர்நீச்சல் போட்டு வரும் மீன்கள் அறியாமல்
செம்படவன் விரித்த வலையினில்
கிடத்திகொள்ளும்

இங்கு மழைமகளுக்கு நன்றி கூறி
நாட்டுபுறச்சிந்து இசைத்து கொண்டிருப்பர் என தமிழ் மக்கள்

இது தான் தமிழனின் கார்க்காலம்

எழுதியவர் : சின்னு (16-Feb-18, 11:46 am)
பார்வை : 202

மேலே