காதலின் வறட்சி

காதலின் வறட்சி

என் காதல் கனவெல்லாம்
காற்றோடு கரைந்தோட

எஞ்சிருக்கும் நினைவெல்லாம் நெஞ்சினில் வந்துபோக

வறண்டு போன என் காதல் ஊற்றெல்லாம் மீண்டும் நனைந்திட-உன் நெஞ்சில் மா மழை பெய்திடாதோ

காதல் கடலில் நாம் மூழ்கிருக்க-உன்
மவுனத்திற்கும்,விழி அசைவிற்கும் நான் அகராதி எழுதினேன்

கடித முத்தம் நான் கேட்க
மீசை துளிரட்டும்
முத்தம் வரும் என்றாயே என் தமிழச்சி

மீசையும் துளிர்த்தது என் காதலும் அவள் இதயத்தில் சிறைபட்டது

சோதனைகளை தாங்க மனதில் வலிமையில்லை என்னவளிடம் மனதை மட்டும் அடமானம் வைத்துவிட்டேன்

ஏன் இந்த நிலையென-நான் கேட்கும் போதெல்லாம் அழகாய் பதிலுரைப்பாள் இதுவும் கடந்து போகும் என்று

கூடல் பொழுதுகள் அதிகமில்லை என்றாலும்
ஊடல் மொழிகளுக்கு எந்த குறையுமில்லை

பேசாமல் அவள் என் குரல் கேட்கும் போதெல்லாம் -நான்
என்ன இசைஞானியா என்று நினைத்துகொள்வேன்

சிறு சிறு சண்டைகள் அவளின் மீதான ஆசையைதான் தூண்டியதே தவிர வெறுப்பையல்ல

அவளின் விழியை மட்டும் உற்றுநோக்கி விட்டால் -என் காதல்
கனிந்துவிடும்

இது என் காதலின் தோல்வி அல்ல

காதலின் வறட்சி

எழுதியவர் : சின்னு (16-Feb-18, 11:09 am)
Tanglish : kathalin varatchi
பார்வை : 120

மேலே