கார்த்திகை தீப நினைவுகள்

விடியல் தொடங்கிய உடன்
சோம்பல் முறிக்கும் தோரணையில்
வீடெல்லாம் விண்மீன்களை
தெறிப்பாளே

கோலமிட்ட கையோடு
கோபுர கொண்டை இட்டு
கோலமயில் போல்
தத்தி தத்தி நடப்பாளே

புத்தாடை உடுத்திய உடன்
பூஞ்சோலைக்குள் மாட்டிய
பூநாகம் போல் நெளிந்தே
நாணம் தெளிப்பாளே

அகல் விளக்குகள் மத்தியில்
நகல் எடுத்த நிலவாக நின்று
பகல் தேவதையாக சிரிப்பாளே

காரிகை கடந்து போன பின்னும்
கார்த்திகை தீப சுடராக
காற்றில் அசைந்தே என் நினைவில்
இருப்பாளே

எழுதியவர் : MURALIDHARAN (16-Feb-18, 12:15 pm)
பார்வை : 91

மேலே