காதல் செய்து

காதலைக் கொச்சைப்படுத்தாதீர்கள்
காதல் செய்து.

தனக்கான இணை தேடுவதா
காதல்?
அவருக்கான இணையாய்
நீங்கள் அமைவதே காதல்.

பழிவாங்குவதும்
பலிகொடுப்பதும்
காதலல்ல..
வக்ரம்..

மனத்தைப் பறிகொடுக்கவில்லை
நீங்கள்.
மனம் உங்களைப் பறிகொடுத்துவிட்டது.

வாழ்க்கையைக் காதலியுங்கள்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (16-Feb-18, 12:37 pm)
Tanglish : kaadhal seithu
பார்வை : 236

மேலே