அழகிய தமிழ் மகள்

ஆம்
அவள் அழகிய தமிழ் மகள் தான்
அழகிய தமிழாலும்
தமிழின பண்பாலும்
அவள் அழகிய தமிழ் மகள் தான்..

21ம் நூற்றாண்டு இணையத்தில் மூழ்கிடவே...
இவளோ புத்தகங்களை தோழியாக கொண்டவள்

இளம்பெண்களை மேற்கத்திய கலாச்சாரம் வீழ்த்திடவே
இவளோ இயற்கையில் மிளிர்கிறாள்

கைப்பேசியும் கையுமாய் அலையும் பெண்களிடத்தில்
புத்தகத்துடன் திரிந்து
அம்மாவிடம் செல்லமாய்
குட்டு வாங்கியவள்

நிலவொளியை ரசித்திடவே மின்வெட்டுகாக ஏங்குபவள்

மழை மகளிடத்தில் நனைந்திடவே ஓட்டை கூரையை விரும்புபவள்

சமுதாயம் சீர்கெட்டு போகும் முன்னே
புதுமை பெண்ணை தேடுபவள்

எளிமையாய் இருப்பதையே
அணிகலன்களாய் கொண்டவள்

கோழி கோழிகுஞ்சுகளுடன் விளையாடியே
அப்பாவிடம் திட்டு வாங்கியவள்

கார் மேகம் எல்லாம் தனக்கு பஞ்சு மெத்தையாக வேணும்மென நினைப்பவள்

காக்கை குருவி எல்லாம் என் உடன்பிறப்பு என அகம் மகிழ்பவள்

அவள் அண்ணனின் ராஜ்ஜியத்தில்
இளவரசியானவள்
எல்லோரையும் கொள்ளை கொண்ட
இவள் மனதை கொள்ளை கொள்ள போகும் இளவரசன் யாரோ.......

எழுதியவர் : லெட்சுமணன் செல்வராசு (10-Sep-19, 8:24 pm)
சேர்த்தது : வேல செ லெட்சுமணன்
பார்வை : 98

மேலே