கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி

S.S.ராஜேந்திரன், விஜயகுமாரி நடிப்பில் 1962 ல் வெளிவந்த தெய்வத்தின் தெய்வம் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் இயற்றி, G.ராமநாதன் இசையமைப்பில் T.M.சௌந்தரராஜன் பாடிய ஒரு அருமையான பாடல் ’கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி’:

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி? - உன்
கன்னத்தில் எத்தனை பள்ளமடி?
பெண்ணுக்குள் எத்தனை உள்ளமடி? - கொஞ்சம்
பேசி விட்டால் என்ன மோசமடி? - கொஞ்சம்
பேசி விட்டால் என்ன மோசமடி? (கண்ணுக்குள்)

முக்கனிச் சாறு பிழிந்து வைத்து - அதை
மூடி விட்டாய் ஒரு ஆடையிட்டு
(முக்கனிச் சாறு)

சர்க்கரைப் பந்தலைப் போட்டு வைத்து
சர்க்கரைப் பந்தலைப் போட்டு வைத்து - வாசல்
சாத்தி விட்டாய் ஒரு வேலியிட்டு - வாசல்
சாத்தி விட்டாய் ஒரு வேலியிட்டு (கண்ணுக்குள்)

ஆசை முழுவதும் தேக்கி வைத்தேன் - அதில்
ஆயிரம் கற்பனை ஆக்கி வைத்தேன்
(ஆசை முழுவதும்)

பாசத்தில் நான் என்ன பாக்கி வைத்தேன்
பாசத்தில் நான் என்ன பாக்கி வைத்தேன் - எந்த
பாபத்திற்கோ என்னை நீக்கி வைத்தாய்? - எந்த
பாபத்திற்கோ என்னை நீக்கி வைத்தாய்? (கண்ணுக்குள்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-18, 3:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 172

மேலே