படைத்தவன் யார்
அண்டசராசரம் நமது பார்வைக்கும்
கற்பனைக்கும் அடங்காதது
அதில் அணுவினும் சிறியது
பூமி ; பூமியே நம் கற்பனைக்கு
எட்டா அற்புதங்கள் நிறைந்தது
படைப்பில்லாமல் வருவது ஏதுமில்லை
அண்டசராசங்கள் சேர்த்து , படைத்தவர் யார்
முற்றுப்பெறாது இந்த தேடல்
ஏனெனில் நூலைப் பிடிக்க நுனி எது
முனை எது தெரியலையே ..............
நூலின் நீளம் தெரிய .............
படைத்தவன் உண்டு என்ற
நம்பிக்கை மனதில் இருக்க
மனம் ஒரு நாள் அவனை சந்திக்கும்
மனம் மட்டுமே சஞ்சரிக்கும் அண்டசராசசரம் ஊடே