சிந்தும் சிந்தனை!

அன்றுவரை என் மனதில்
ஒன்றுமில்லை என்றிருந்தேன்!
கண் மூடி படுத்திருந்தேன்
கொட்டியது கவிதை கண் முன்னே!
கண்ணே!
முத்தே! என்று கனவிலும் யோசித்ததில்லை!
பின் எப்படி பூத்தது கவிதை பூக்கள்!
என் உயிரில் வேரூண்றியதோ
தமிழ்!
வளர்ந்த தமிழ் மரத்திலிருந்து
சிந்தும் சிறு இலைகளாய்!
இன்று
நானும் என் சிந்தனையும்!

எழுதியவர் : க.ரகுராம் (13-Aug-11, 8:40 pm)
சேர்த்தது : ரகுராம்.க
பார்வை : 349

மேலே