தேம்ஸ் பாயும் காவிரி தீரம்
காகிதம் இல்லை பேனா இல்லை
செய்கூலி இல்லை சேதாரம் இல்லை
வாரச் சந்தையில் விற்பனையும் இல்லை
கற்பனை இங்கே இலவசம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்
ஏன் ஒவ்வொரு நொடியும்
கவிதைகள் விரியும்
எலெக்ட்ரானிக் தோட்டம்
ஆங்கில அட்சரத்தை தொட்டால்
தமிழ் தென்றல் வீசும் அதிசயம்
கங்கை காவிரியில் சேருகிறதோ இல்லையோ
இங்கே தேம்ஸ் காவிரியில் சங்கமம்
கவிஞனின் புனித நதி தீரம்
-----கவின் சாரலன்