சிவ தனுசு


சிவ தனுசையா ஓடிக்கச்
சொல்கிறேன்
சின்ன வேலை தேடிக்கோ
என்கிறேன்
காதல் முடங்கல்
வரி வரியாய் வானவில்லை
வளைச்சு வெச்சிருக்கே
வேலையுடன் வா
என்றான் பெண்ணின் அப்பன்

வேலையா?
சிவ தனுசே
தேவலாம்
என்று தோன்றியது
இளைஞனுக்கு
-- கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Aug-11, 9:15 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 346

மேலே