தந்தை ஓர் புனிதன்

உன் முத்தங்களில் நனைந்து
உன் வியர்வைவசம் மயங்கி
உன் குரலுக்கு இயந்தேன்
பயமா பாசமா மரியாதையா?
எண்ணியதில்லை அப்போது

'என் மக' ளேனும் மகுடம் சூட்டி
அன்பின் சாளரம் வழி
புது புது அனுபவங்களால்
வாழ்க்கையை புனிதம் செய்தாய்

இன்னல்கள் சுமக்கும் தூணாக
எண்ணங்கள் இடேற்றும் ஏணியாக
அயராமல் உழைக்கும் வலிமையுடன்
என்பாதைக்கு வெளிச்சம் தந்தாய்

அப்போது புரியவில்லை அப்பா
உன்னை போல் நானென்பது
என் சாயலில் நீஎன
பூரிப்பில் பிரமித்தேன் சிறுவயதில்

இப்போது வேண்டுகிறேன் இறைவா
முப்பிறவி பலனாய் படரட்டும்
என் வாழ்நாள் வரமென
தந்தையை ரசிக்கும் மகளாக

உன்பாசப் புதையலில் தொலைந்து
என்றும் உன் புன்னகைதேசத்து
புதுமலராய் உன்னில் பூத்திடும்
பிரியா வரம் வேண்டும்

எழுதியவர் : அருண்மொழி (17-Jun-18, 10:05 pm)
பார்வை : 223

மேலே